Header image alt text

நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார, இன்று (31) தெரிவித்தார். Read more

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் ஒக்டோபர் 21ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (30) விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர். Read more

கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், சிரேஷ்ட துணைத்தலைவர் தோழர் வே.நல்லநாதர், செயலாளர் தோழர். இரட்ணலிங்கம், பொருளாளர் தோழர் க.சிவநேசன், நிர்வாக பொறுப்பாளர் தோழர் ம. பத்மநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (30.10.2022) வவுனியாவில் நடைபெற்றது. Read more

30.10.2007இல் முருகனூரில் மரணித்த தோழர்கள் செல்வராஜா (சிதம்பரப்பிள்ளை செல்வராஜா – சிதம்பரபுரம்), ரஞ்சன் (இருதயம் வேதராசா) ஆகியோரின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தவர்களில் இலங்கை​யைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. Read more

பல்வேறு சட்ட காரணங்களுக்காக சுங்கப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அரசின் தேவைகளுக்காக விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் தற்போது கடுமையான வாகனப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பொலிஸ் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். Read more

சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். Read more