அமெரிக்காவிடமிருந்து 12 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய நிவாரண உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டுடன் இந்த வைத்திய நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க மனிதாபிமான உதவி அமைப்புகள் என்பன இணைந்து இந்த மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளதுடன், 3 கட்டங்களின் கீழ் சுகாதார அமைச்சிடம் இந்த மருத்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதி கட்ட உதவிப் பொருள்கள் இன்று இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.