அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பொது அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  பேரணி களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்போது, பேரணியை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.