வவுனியா பட்டகாடு இராமர் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் கலைவிழா நிகழ்வுகள் ஆலய பரிபாலன சபையின் தலைவர் மயூரதன் தலைமையில் 03/10/2022 அன்று நடைபெற்றது. நிகழ்வில் வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினால் அறநெறி, ஆலய சமூக வளர்ச்சிக்காக உதவியமைக்காக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுடன், பொலிஸ் உத்தியோகத்தர், இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.