வவுனியா திருநாவற்குளம் சிவன் ஆலய வாணிவிழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு ஆலய தலைவர் புவனேந்திரன் தலைமையில் 05/10/2022 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதியாக வவுனியா நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், கருங்காலிகுளம் அ.த.க.பாடசாலை அதிபர் புனிதா, மகளீர் செயற்பாட்டாளர் சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை, அறநெறி ஆசிரியர்கள் ஆலய உபதலைவர், செயலாளர் பாலேந்திரன், பொருளாளர் விக்னபவானந்தன் ஆகியோருடன் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.