தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகர தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நேற்று (06.10.2022) வியாழக்கிழமை ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகரில் ஆரம்பமான தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு பன்னாட்டு பரவல் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது தமிழக அரசின் தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை நிர்வாகத்தினர் சந்தித்து, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துதல், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பில் ஜேர்மன் கிளை சார்பில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் செ.ஜெகநாதன், தோழர்கள் பவானந்தன், சந்திரன், திருமதி சிவகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.