திருநாவற்குளம் 1ம் ஒழுங்கையில் அமையப்பெற்றுள்ள புதிய கட்டிட திறப்பு விழா சங்க தலைவர் இராஜேஸ்வரன் ரஞ்சன் தலைமையில்
05/10/2022 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் நகர சபை தலைவர் இ.கௌதமன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், நகர சபை உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் ரவி, வர்த்தக சங்க தலைவர் சுஜன், செயலாளர் அம்பிகைபாலன், தமிழ் விருட்சம் தலைவர் சந்திரகுமார், வடமாகாண சமாச தலைவர் மற்றும் ஏனைய மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், உரிமையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.