Header image alt text

7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரியொருவர், இன்று (10) தெரிவித்தார். Read more

கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்று இரவு தாம், போராட்டம் குறித்து அறிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்த போதும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் மறுத்துள்ள நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. Read more

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமைக்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைத்து, ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களின் பின்னர் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை இன்று(10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ரஷ்யாவின் எரோப்ளோட்(Aeroflot) விமானம் இன்று(10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. Read more