மன்னார் முள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், பெரியகமம், எழுத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்கள் இன்று (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையினுடைய முன்னாள் அமைப்பாளருமான தோழர் ரங்கா, தோழர் ராதா (ஓய்வுபெற்ற நிர்வாக கிராம அலுவலர்) ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
11.10.2022.

குறிப்பு : அமரர் செபமாலை மேரி லெம்பேட் அவர்களின் உடல் 13.10.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக மன்னார் கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.