இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றிய கே.எம்.ஏ.என்.தௌலகல, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று, வங்கி, இன்று (11) அறிவித்துள்ளது.
அறிவிப்புக்கு அமைய, நிதி அமைச்சரின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.