யாழ்ப்பாணம், தாவடி வடக்கு (J/194) மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறைக் கடன் வழங்குவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தாவடி வடக்கில் கட்சியின் மகளிர் அணிப் பொறுப்பாளரும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினருமான திருமதி கா.சந்திரவதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கட்சியின் கனடா கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் தோழர் கே.கந்தசாமி அவர்களின் நிதிப்பங்களிப்பில் மாதர் அபிவிருத்திச்சங்க நிர்வாகிகளிடம் குறித்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷன், கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் இரா.தயாபரன் மற்றும் கட்சியின் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை வழங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3ஏ சித்தி பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி காந்தராசா நந்தாயினிக்கு அவரது பெறுபேற்றை பாராட்டி கட்சியின் கனடா கிளையின் முக்கிய செயற்பாட்டாளர் தோழர் கே.கந்தசாமி அவர்களின் நிதிப் பங்களிப்பின் மூலம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ரூபா பத்தாயிரம் வழங்கி வைக்கப்பட்டது.