இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சாத்திக்கூறுகள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்ததத்தை மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளபோதும் இலங்கை அதில் இடம்பெறவில்லை.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த பெற்றோருக்கு, 1993ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த மனுதாரர் இந்திய குடியுரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் மனுதாரரின் மனுகுறித்து 16 வாரங்களுக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.