கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு பரிஸ் கிளப் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டில், பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு பரிஸ் கிளப்பின் முழு ஆதரவைரூஸ் உறுதியளித்தார்” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும், பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிஸ் கிளப்பில் 22 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளதுடன், இதில் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்குகின்றன.