புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக் கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதனூடாக கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறைகளில் ஈடுபடும் அடிப்படைவாத குழுவினர் மற்றும் ஏனைய நபர்களை புனர்வாழ்வு நிலையங்களில் கட்டாயம் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இந்த சட்டமூலத்தினூடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.