அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (தோழர் பாலா அண்ணர்)

22.10.2020

தோழர் பாலா அண்ணர் கண்டியைப் பிறப்பிடமாகவும், ,பண்டாரிகுளம், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்டவர்,

இனப்பற்றும், தமிழ் பற்றும் மிக்க இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்தார்.

முதன்முதலில் வவுனியாவில் மலையக மக்களின் பிரதிநிதியாக எமது கட்சியின் சார்பில் 1994 நகரசபை தேர்தலில் போட்டியிட்டு நகரசபையின் உபதலைவரானார்.

தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதோடு வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளையும் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இவர் எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார்.