ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஐக்கிய இராச்சியக் கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம் (01.10.2022) Trinity Centre, East avenue, Manor Park, London E12 6SG எனும் முகவரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கிளையின் தலைவராக தோழர் நேதாஜி அவர்களும், செயலாளராக தோழர் சுகந்தன் அவர்களும், பொருளாளராக தோழர் கமலி அவர்களும், உபதலைவராக தோழர் சோபி அவர்களும், உபசெயலாளராக தோழர் சிவபாலன் அவர்களும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தோழர் வேந்தன், தோழர் சம்பந்தன், தோழர் முகுந்தன், தோழர் பாலா ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
புளொட் அமைப்பின் மத்தியகுழுவிற்கான ஐக்கிய இராச்சியக் கிளைப் பிரதிநிதியாக தோழர் அல்வின் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.