ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பிரான்ஸ் கிளை நிர்வாகத் தெரிவுக் கூட்டம் 02.10.2022 பிரான்ஸில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், கிளையின் அமைப்பாளராக தோழர் சுகுமார் அவர்களும், செயலாளராக தோழர் தயாபரன் அவர்களும், உதவிச் செயலாளராக தோழர் குறிஞ்சி அவர்களும் பொருளாளராக தோழர் ஜெயந்தன் அவர்களும், உதவிப் பொருளாளராக தோழர் சிவசீலன் அவர்களும் புனர்வாழ்வு விடயங்களுக்கான பொறுப்பாளராக தோழர் சசி(முல்லை) அவர்களும், புனர்வாழ்வு விடயங்களுக்கான உதவிப் பொறுப்பாளராக தோழர் உதயன் அவர்களும் வெகுஜனத் தொடர்பாளராக தோழர் தயா (மட்டு) அவர்களும் உதவி வெகுஜனத் தொடர்பாளராக தோழர் சசி (வெள்ளை) அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், புளொட் அமைப்பின் மத்தியகுழுவிற்கான பிரான்ஸ் கிளைப் பிரதிநிதியாக தோழர் ரங்கா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.