இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.