தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தியண்ணர் (அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட 50,000 ரூபாய் நிதியில், வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளகத்தைச் சேர்ந்த சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தோழர் ஆனந்தியண்ணர் அவர்களின் முதலாண்டு நினைவு நாளான 22.10.2022 சனிக்கிழமை அன்று அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து விசேட உணவு வழங்கப்பட்டது.