Header image alt text

நந்தாவில் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நல்லூர் பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் ப.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more

உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, அவ்வாறு செய்யத் தவறினால் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார். Read more

இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதாரச் சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. Read more

Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது. Read more

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், தனது டுவிட்டர் செய்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வரவிருக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதே அவரது விஜயத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார். Read more

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பேர்னாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.