கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், சிரேஷ்ட துணைத்தலைவர் தோழர் வே.நல்லநாதர், செயலாளர் தோழர். இரட்ணலிங்கம், பொருளாளர் தோழர் க.சிவநேசன், நிர்வாக பொறுப்பாளர் தோழர் ம. பத்மநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (30.10.2022) வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டத்தின் அமைப்பாளராக தோழர் வே.குகதாசன் (குகன்) அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டத்தின் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் தெரிவுகளை மிக விரைவில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.