2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை ​நீதவான் திலிண கமகே, இன்று (02) பிறப்பித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நீதவான் விசாரணையை மீண்டும் அழைப்பித்த போதே நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ​தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் ரிஷாட் பதியூதீன் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.