.வவுனியா நகரசபையின் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிகழ்வுகளின் வரிசையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “சிறந்த பெற்றோர் ஆதல்” எனும் தலைப்பில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஆதரவோடு 05.11.2022 அன்று வவுனியா பொது நூலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிகழ்வின் அதிதிகளாக வவுனியா தெற்குக் கல்வி வலய முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் வீ.பரஞ்சோதி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான சுந்தரலிங்கம் காண்டீபன், நிருபா, மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, பிரதேச சிறுவர் நல உத்தியோகத்தர் சசிதரன், உளவள உத்தியோகத்தர் கார்த்திகா, பிரதம நூலகர் பாமினி, நூலகர் ரஞ்சிதமலர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களென அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.