Posted by plotenewseditor on 8 November 2022
Posted in செய்திகள்

கொடிகாமம், திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தொகை நிதி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் கையளிக்கப்பட்டுள்ளது. கழக சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் செல்வபாலனின் பங்களிப்பில் 40,000/= ரூபாய் நிதி பாடசாலை அதிபர் முன்னிலையில் வகுப்பாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் ஊடக பிரிவுப் பொறுப்பாளர் இ.தயாபரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.