ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் முகுந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த கழகத் தோழர் சரவணபவன் என்பவருக்கு 25,000 ரூபா நிதியுதவி வழங்கவைக்கப்பட்டது.
தோழர் சரவணபவன் விபத்தொன்றில் கை ஒன்று முறிந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் அவருடைய வைத்திய செலவுக்காக இன்று (10-11-2022) மேற்படி நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் ப.ரவிச்சந்திரன் (சங்கரி), மாவட்ட பொருளாளர் தோழர் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.