11.11.2020 – 11.11.2022
அமரர் முத்தையா வில்வராசா (தோழர் சதீஸ்) அவர்கள்
வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்ததோடு, தொடர்ந்து கழகத்தின் செட்டிகுளம் பிரதேச உதவிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். பின்னர் ஆசிரியராக பணியாற்றிய போதிலும் மரணிக்கும் வரை கட்சிப் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் தீவிரமாக செயற்பட்டு வந்தார்.