கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. இந்நிலையில் தொல்பொருள் என்ற போர்வையில் அவ் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு சிங்கள ஆக்கிரமிப்பின் காரணமாக ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகின்றது. இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயல்கின்றது.
தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடு கிழக்கில் மாத்திரமின்றி வடக்கிலும் நடந்தேறி வருகின்றது.
எனவே கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் இச்சபையில் கண்டனப் பிரேரணையை நிறைவேற்றுகின்றோம்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் பொன்.செல்லத்துரை பிரேரணையை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் (10/11/2022) மு.ப 11.00, மணிக்கு நிறைவேற்றப்பட்டது.
மேற்படி சபையின் 56 வது சபை அமர்வு வவுணதீவில் அமைந்துள் பிரதேச சபையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.