நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (14) சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) முன்மொழிவுகள்….

  1. அதிரடி அறிவிப்பு

    • அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்துகின்ற விடுதிகள் மீள நடைமுறை

    • விசேட வகை தவிர்ந்த  ஆயுதப்படை ஆளணியை  18 வருட சேவையின் பின் ஓய்வுக்கு அனுமதித்தல்

    • சில விலக்களிப்புகளை  நீக்க  2023 ஏப்ரல் 01 முதல்,   பெறுமதி சேர் வரிச்  சட்டத்திற்கான திருத்தம்

• சமூர்த்தி, முதியோர், அங்கவீனர் மற்றும் சிறுநீரக   பயனாளிகளின் கொடுப்பனவுகளை மே அதிகரித்தல்

• சிறுவர் போஷாக்கினை மேம்படுத்த மேலதிக ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டங்களை மேலும் வலுவூட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாய்

• பொருளாதார மீட்சி காரணமாக சுமார்  ஒரு வருடத்தில் அரசாங்க வருவாய் அதிகரிக்குமென  எதிர்பார்ப்பதால் அரசாங்க ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் நிவாரணம்

• சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 %ஆக  அதிகரிப்பதற்கான நடவடிக்கை

• ஒவ்வொரு 18 வயதுக்கு மேற்பட்டவரும் வரிக் கோவையொன்றினை ஆரம்பிப்பது  முதற்படியொன்றாக இருக்கின்ற  அதேவேளை  கோவைகளை ஆரம்பித்தவர்களில் பலர்  வரியற்ற அடிப்படை அளவுக்கு கீழே இருப்பர்

• வெளிநாட்டு மூலங்கள் மற்றும்  அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூரிய சக்தி பெனல்களை வழங்குவதற்கு  நடவடிக்கை

ஒதுக்கீடுகள்

• ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான விசேட நிறுவனமொன்றினை தாபிக்க 100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• பொருளாதார வலயங்களை உருவாக்குவதற்கு 300  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவைத் தாபிக்க 100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை அமைக்க 100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• ஆரோக்கியமான  வியாபார சூழலொன்றினை உருவாக்குவதற்கு தேவையான மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்த 200  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• கருவா தொழிற்றுறைக்கான புதிய திணைக்களத்தை தாபிக்க 200  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• கிழக்கு மாகாணம், தெற்கு  மற்றும்  மேல் மாகாணங்களில் கடல்சார்  சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 50  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• 139 மாகாணப் பாடசாலைகளும் 23 தேசிய பாடசலைகளையும் போன்று மிகக் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமியப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• வைத்தியர்களுக்கான பட்டப் பின்படிப்பு  நிறுவனங்களை தாபிக்க 60  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• பல்கலைக்கழகங்களில் காணப்படும் பட்டப்படிப்பு கற்கைகளின் தரம் மற்றும் அங்கீகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு தர உத்தரவாத மற்றும் சான்றுப்படுத்தல் சபை 100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• ஊவ வெல்லஸ்ஸ  பல்கலைகழகத்தில்  மருத்துவ பீடத்தினை நிறுவ 200  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• வரலாற்று ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனமொன்றினை நிறுவ  50  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• சகல அரச நிறுவனங்கள் மூலமும்  இணையவழி மூலமாக  கட்டண சேவைகளைப்  பெற்றுக் கொள்வதற்கும் முறைமையொன்றினை தயாரிப்பதற்கும் 200  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• நன்னீர்  நீர் உற்பத்திக்காக வசதிப்படுத்துவதன் கீழ் உள்நாட்டு மீன்பிடித் துறையினை செய்வதற்காக 100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• 10 விவசாய தொழில்முயற்சியாண்மைக் கிராமங்களை நிறுவுவதற்கு 250  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

• மதுவரித் திணைக்களத்தின் கீழ் புதிய ஆய்வுகூடத்தினை நிறுவ  100  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

 வரி விதிப்புகள் மற்றும் திருத்தங்கள்

• கடவுச்சீட்டு,  வீசா மற்றும் ஏனைய அறவீடுகள் மீது  குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் அறவிடப்படும் கட்டணங்களை  20 சதவீதத்தினால் அதிகரித்தல்

• பீடி  தொழிற்றுறையினை ஒழுங்குபடுத்துவதற்கும்   பீடி  பாவனையிலிருந்து  மக்களை  தூரமாக்குவதற்கும், பீடி ஒன்றுக்கு  2 ரூபாவினை வரியாக விதித்தல்

• துணைத் தீர்வைகளை இல்லாதொழித்தல்

• 2023 ஜனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வை வீதமான 0%,   10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%,  15% மற்றும்   20% ஆக திருத்தம்

• விவசாயத்தின்  அடிப்படையில்  கொண்ட  பெறுமதி சேர்த்தல்களின் அடிப்படையிலான கைத்தொழிலாளர்களுக்கு  தொடர்புடைய செஸ்  வரிகளுக்கு தடைகள் இல்லாத விதத்தில்   வரிக் கொள்கை

• அரசாங்க நிறுவனங்களினால் அறவிடப்படுகின்ற மற்றும் சேகரிக்கப்படுகின்ற உரிமத்தொகை, வாடகை மற்றும் ஏனைய வரியல்லா வருவாய்கள் பற்றி  ஆராய்ந்து பொதுத் திறைசேரிக்கு  பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு குழு

முன்மொழிவுகள்

• ஏற்றுமதி அபிவிருத்திச் சபை,  முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுதாபனம், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை  போன்ற நிறுவனங்கள் அனைத்திற்கும் பதிலாக புதிய சட்டமொன்றினை உருவாக்கி ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான விசேட நிறுவனமொன்றினை தாபித்தல்

• வெளிநாட்டு முதலீட்டினை கவருவதற்காக தற்பொழுது இனம் காணப்பட்டுள்ள மேல் மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை  சூழலினை அண்டிய பொருளாதார வலயங்களை உருவாக்குதல்

• தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்குப் பதிலாக தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினைத் தாபித்தல்

• உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளை  வினைத்திறனுடன்  கொண்டுநடாத்தும் விதத்தில் புதிய, இற்றைப்படுத்தப்பட்ட அத்துடன் ஒன்றுசேர்க்கப்பட்ட தொழிற்சட்டமொன்றை இயற்றுதல்

டிஜிட்டல்   தொழில்நுட்பத்  துறையை மேலும் மேம்படுத்தத் தேவை பற்றி ஆராய்வதற்கும்  அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் தொழிற்துறையிலுள்ள நிபுணர்களையும் தொடர்புடைய அலுவலர்களையும்  ஈடுபடுத்தி குழுவொன்றினை நியமித்தல்

• கருவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதற்காக திணைக்களமொன்றினை கருவாச் செய்கை அதிகளவு இடம்பெறுகின்ற கரந்தெனிய பிரதேசத்தில் தாபித்தல்

• பேராதனை,  உருகுனை,  யாழ்ப்பாணம்  போன்ற   பல்கலைக்கழகங்களில் வைத்தியர்களுக்கான பட்டப் பின்படிப்பு  நிறுவனங்களை தாபித்தல்

• பல்கலைக்கழகங்களில் காணப்படும் பட்டப்படிப்பு கற்கைகளின் தரம் மற்றும் அங்கீகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு நிலைமை சான்றிதல் மற்றும் தர உத்தரவாத மற்றும் அங்கீகார சபையினை தாபித்தல்

• வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு 75 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை. இதற்காக ஏற்படும் செலவினம் ஜனாதிபதி நிதியத்தினால் மேற்கொள்ளப்படவேண்டும்

• ஊவ வெல்லஸ்ஸ  பல்கலைகழகத்தில்  மருத்துவ பீடத்தினை புதிதாக நிறுவுதல்

• இலங்கையின் வரலாறு தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனமொன்றினை நிறுவுதல்

• அரசாங்க சேவையின்  அனைத்து  விதமான நோக்கங்களையும் மீளாய்வு செய்வதுடன் தேவையான  மறுசீரமைப்புகள்  உள்ளடங்களாக  பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி  ஆணைக்குழு ஒன்றினை நியமித்தல்

• வரி விதிப்பு தொடர்பான ஜனாதிபதி  ஆணைக்குழுவினை தாபித்தல்

• அரசாங்க  சேவை நிறுவனங்களினூடாக சேவைகளை வழங்குகின்ற போது அனைத்து  கொடுப்பனவுகளையும், இலத்திரனியல் ஊடாக மேற்கொள்வதை  2024.03.01 ஆந் திகதி தொடக்கம்   கட்டாயமாக்குதல்

• தனியார்துறை ஊழியர்களுக்கு காப்புறுதி  காப்பீடைப்  பெற்றுக் கொடுத்தல் மற்றும் சுகாதார மருத்துவக் காப்புறுதியினைப் பெற்றுக் கொடுத்தல்

• நுண்நிதி, கொடுகடன் ஒழுங்குபடுத்தல்  அதிகாரசபையினைத் தாபித்தல்

• மா ஓயா, அத்தனகலு ஓயா மற்றும் பெந்தர கங்கையினை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன அமைப்புகளுக்கு 500 மில்லியன் ரூபாய் வழங்கல்

 இளைஞர் நலன்கள்

• இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகைக் கடன் திட்டம்

• வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவித்தல்

• நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விவசாய தொழிற்றுறையில்  இளம் சமுதாயத்தை தக்கவைத்தல்

 இலக்குகளும் எதிர்பார்ப்பும்

• 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி

• சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு.  உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல்.

• 2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக  ஐ. அ.டொலர் 3 பில்லியன் வருடாந்தம்  அதிகரிப்பு

• 10 வருடங்கள் முழுவதும் வருடாந்தம் ஐ. அ.டொலர் 3 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடு

• எதிர்வரும் 10 ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல்

• 8.3 சதவீதமாக இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2025 இல் ஏறத்தாள 15 சதவீதமாக அதிகரித்தல்

சுகாதார கரிசனை

• குடிநீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவது சடுதியாக அதிகரித்ததனால்  குடிநீர் போத்தல் பாதுகாப்பு முத்திரைகளை (Sticker) அறிமுகப்படுத்தல்

• சிறைக்கைதிகளுக்கான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு போதுமான வசதிகளை  புதிதாக உருவாக்கல்

• பதுளை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்தல்

 விவசாய மற்றும் வர்த்தக அபிவிருத்தி

• 4 ஹெக்ரேயருக்கு குறைவான தென்னங் காணிகளை  துண்டாக்குவதற்கு வரையறை மற்றும் சட்டத் திருத்தம்

• ஶ்ரீ லங்கன் எயாலைன்ஸ், ஶ்ரீ லங்கா ரெலிகொம்,  கொழும்பு ஹில்டன்,  வோட்டேர்ஸ் எட்ஜ்  மற்றும் அதன் துணநிறுவனங்களுடன் சேர்த்து  இலங்கை காப்புறுதிக்  கூட்டுத்தாபனம்  என்பவற்றை உரிமமாற்றம் செய்தல்

• இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் ஒன்றிணைக்கப்படும். தொழிற்றுறை பங்குபற்றுநர்களின் நன்மைக்காக இரத்தினக்கல் விற்பனை நிலையத்தை உருவாக்கல்

• கஞ்சாவை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி செய்வதற்கான ஆற்றல்களை தேடிப்பார்க்க நிபுணர் குழு

• வனப்பரம்பலினை அதிகரிப்பதற்கான சமுதாயப் பங்களிப்பு

•அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்தலும் களஞ்சியப்படுத்தலை மேம்படுத்தலும்

மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம்

• நாட்டின் அனைத்து அபிவிருத்தி தலையீடுகள் பற்றிய நடைமுறைப்படுத்தல் பிரச்சனைகளை கண்டறிந்து, தோன்றுகின்ற பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதற்காக தேசிய தொழிற்பாடுகள் நிலையமொன்றினைத் தாபித்தல்

• நிதியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைத்தல்

  சமூக மற்றும் சுற்றாடல் நலன்

•  முதியோர் / மாற்றுத் திறனாளிகள் / விதவைகள் / வீட்டலகு தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தல்

•  பசுமை ஹைட்ரஜனினை வர்த்தக நோக்கத்தில்  தயாரிப்பது தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்க மற்றும் தனியார்துறையின்  ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த கருத்திட்டமொன்றினை  ஆரம்பித்தல்

•  பூகோள வெப்பமாதல் அதிகரித்துச் செல்லும் போக்குடன் வனப் பரம்பலினை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம்

• மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியினை உபயோகித்து மின்சார உற்பத்தியினை  ஊக்குவிக்கும்  பொருட்டு, அதனுடன்  தொடர்புடைய  அதற்குரிய சூரிய பலகங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவித்தல்