Header image alt text

யாழ். செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த வேதாரணியம் பிரபாகரன் புவிதா தம்பதிகளின் புதல்வர்களான மதுசன், மாதவன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் Read more

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சந்தேகநபர்கள் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டார். குறித்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். Read more

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. Read more

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, புனர்வாழ்வு பெற்றுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் மாலை விளையாட்டுப் பயிற்சியின்போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. Read more

அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும் போது, உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார். அதற்கு தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தம்மிடம் காணப்படுவதாக அவர் கூறினார். Read more

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். Read more