இன்றைய தினம் நெடுங்கேணி கற்குளம் அ.த.க பாடசாலையின் இரண்டு அதிபர்கள் மாற்றலாகி செல்வதை முன்னிட்டு பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அதிபர் ம.செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கநாதன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் வசந்தன், கிராமசேவையாளர் பிரதீபன், அயல் பாடசாலை அதிபர் திரு விமலேந்திரன்,
நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் சோ.சத்தியேந்திரன், ஓய்வு நிலை கிராமசேவையாளர் திரு அருளானந்தம் மற்றும் கெளரவிக்கப்பட்ட அதிபர்களான திரு சுதாகரன்,திரு சத்தியசீலன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.