
Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது. கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகள் 4 பேரையும் நாடு கடத்துவது, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அமையும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், ஆவணங்களை வழங்கியவுடன், குறித்த தண்டனைக் கைதிகள், நாடு கடத்தப்படுவார்கள். அதுவரை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதீப் குமார் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 November 2022
Posted in செய்திகள்
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது. அதனடிப்படையில் 37 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை, பாராளுமன்ற நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more