ஜேர்மன், லுட்விக்ஸ் பேர்க் நகரில் வசிக்கும் பரமானந்தம் உமாகாந்தி தம்பதிகளின் 32வது திருமண தினத்தை முன்னிட்டு (21.11.2022) ஜேர்மன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரின்(புளொட்) ஒழுங்குபடுத்தலில், பனிக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மகளிர் அமைப்பினருக்கும், கிழவன்குளம் இயலருவி மகளிர் அமைப்பினருக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சுய தொழில் ஊக்குவிப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் (பவன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லை மாவட்டச் செயலாளரும் மு/வித்தியானந்தா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமான க.சிவலிங்கம், கட்சியின் இளைஞர் அணி பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம், கிழவன்குளம் பிரதேசத்தில் சிறப்பாக செயற்படுகின்ற, வினைத்திறனுடன் இயங்குகின்ற மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மேற்படி சுய தொழில் ஊக்குவிப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.