Header image alt text

மட்டக்குளிய பகுதியில், நபரொருவர் இன்றுகாலை படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். Read more

அடுத்த ஆண்டு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமில்லை என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அடுத்த வருடம் முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (28) இதனை தெரிவித்த அவர் அந்த முறைமை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்தார். தரமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், ஆனால் இந்த முறைமை அங்கீகரிக்கப்பட்டு 8 வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். Read more