அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் கட்டணம் 70 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது மக்களுக்கு கட்டுப்படியாகாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்க முடியாத நிலை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின் கட்டணம் அதிகரித்தால், இந்த ஆண்டு ஜனவரியில் 1,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரியில் 3,000 ரூபாயாகவும், 2,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 6,300 ரூபாயாகவும், 10,000 ரூபாயாக இருந்த மின்கட்டணம் 32,000 ரூபாயாக உயரும் என அவர் கணித்தார்.