Header image alt text

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக UNICEF நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான UNICEF நிறுவனத்தின் புதிய அறிக்கையின் பிரகாரம்,  மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களில் 2.9 மில்லியன் குழந்தைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். Read more

மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more

மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா ஊடக அமையத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், “குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில்  முன்னெடுக்கவுள்ளனர்.

Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் பாபு அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வவுனியா கூமாங்குளம் 4ஆம் ஒழங்கையைச் சேர்ந்த கழகத் தோழர் அரசன் (சு.மகாலிங்கம்) என்பவருக்கு மருத்துவ செலவுக்காக இன்று(07.12.2022) 100,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

Read more