ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஐக்கிய இராஜ்ஜிய கிளைத் தோழர் பாபு அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வவுனியா கூமாங்குளம் 4ஆம் ஒழங்கையைச் சேர்ந்த கழகத் தோழர் அரசன் (சு.மகாலிங்கம்) என்பவருக்கு மருத்துவ செலவுக்காக இன்று(07.12.2022) 100,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

உதவி வழங்கலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன் (வே.குகதாசன்), நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் பற்றிக், தோழர் கொன்சால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.