2022ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையின் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ஆண்டின் முதல் பதினொரு மாதங்களுக்கான (ஜனவரி – நவம்பர்) மொத்த எண்ணிக்கை 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

செப்டம்பரில் 317.4 அமெரிக்க டொலர்காக இருந்த பணம் அனுப்பும் வீதம் ஒக்டோபரில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.