நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புத்தகங்கள் போதிய அளவில் கிடைக்காததால் முறைப்பாடுகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் நிலவும் காகிதத் தட்டுப்பாடு, காகித விலை உயர்வு போன்ற காரணங்களால் பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான  புத்தக விநியோகம் பாதியாகக் குறைந்துள்ளது.

கொழும்பை அண்மித்த பொaலிஸ் நிலையங்களுக்கு மாத்திரம் மாதாந்தம் சுமார் இருபது குறிப்பேடுகள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது ஐந்து புத்தகங்கள் மாத்திரமே பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையால், புத்தகங்கள் முடிந்த பின் மற்ற குறிப்புகளில் உள்ள காகிதங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.