கடும் குளிரான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 1,660 ஆக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உயிரிழந்த விலங்குகளில் 691 மாடுகள் மற்றும் எருமைகளும் 296 ஆடுகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வட மாகாணத்தில் 182 மாடுகள் மற்றும் 147 ஆடுகள் உட்பட 329 நோய்வாய்ப்பட்ட விலங்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் எண்ணிக்கை 511 ஆகவும், அந்த மாகாணத்தில் 44 எருமை மாடுகள் மற்றும் 108 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
மேலும், கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு எருமை மாடு மற்றும் 15 பசுக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கையை தமக்கு வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.