புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.