Header image alt text

“கோட்டா கோகம” மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான  நாமல் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.  குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியுடன் நேற்று (13) நடைபெற்ற நல்லிணக்கம் தொடர்பான கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய ஆட்சி முறை அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான தீர்வு வேண்டும் என்ற விடயத்தை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். Read more

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, ஜனவரி 25ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. Read more

14.12.1988இல் மருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…