சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கிறது? எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா என வினவியுள்ளார். Read more