கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். இவரை சில நபர்கள் கடத்திச் சென்று தாக்கி நாடாவால் கட்டி பொரளை மயானத்தில் விட்டுச் சென்றுதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய செய்தி…

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்று தாக்கி பல் நாடாவால் கட்டி பொரளை மயானத்தில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.