ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட் )இன் சமூக மேம்பாட்டு பிரிவு வழங்கிய நிதி அனுசரனையில் முன்பள்ளிகளின் நிகழ்வு -உரும்பிராய் கிராமத்தின் அனைத்து முன்பள்ளிகளின் (10) சந்தை, கலைவிழா, கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் நேற்றைய தினம் (17/12/2022) சனிக்கிழமை உரும்பிராயில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட் ) அமைப்பின் சமூக மேம்பாட்டு பிரிவு நிதி அனுசரனையாக ஒரு லட்சம் ரூபாயினை வழங்கியிருந்தது.

இந் நிகழ்வில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், வலி கிழ‌க்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பொறுப்பாளர் இ. தயாபரன், பிரதேச சபை உறுப்பினர்களான செல்வராசா, அகீபன் ஆகியோருடன் உரும்பிராய் பிரதேச பாடசாலை அதிபர்கள்
மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.