தமது சேவை காலத்தை நிறைவு செய்து சொந்த நாட்டுக்கு புறப்பட உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது நட்புரீதியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கைக்காக ஹனா சிங்கர் ஆற்றிய சேவைகளுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஹனா சிங்கர் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.