ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதன் மூலமும், அதன் செயற்பாடுகளை மிகுந்த செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலும் இந்த புதிய அலுவலகம் நிறுவப்படவுள்ளது.
இதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்திற்கு சர்வதேச வர்த்தகத் துறைகளின் அதிகபட்ச பங்களிப்பினை வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அடித்தளமாக சர்வதேச வர்த்தக அலுவலகம், சட்டத்தின் மூலம் நிறுவப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.