நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்று (23) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி ஆலை, தற்போதுள்ள நிலக்கரி இருப்புகளை நிர்வகிக்கவும், வழக்கமான பராமரிப்புக்காகவும், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் மின்சார இழப்பு, ஏனைய கிடைக்கக்கூடிய வழிகளில் ஈடுசெய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.