Header image alt text

இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வனப் பாதுகாப்புத்துறைகளை பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் பைடனுக்கான தமிழர் என்ற அமைப்பு, கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் மேற்பார்வையில் நில அபகரிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. Read more

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை 2022 டிசம்பர் 30 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது. இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை வேளையில்  இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more