Header image alt text

சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த தூதுவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கான்பெராவில் நடத்திய ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.  கொங்கோ, மலாவி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கும் மினோலி பெரேரா அவுஸ்திரேலியாவின் தூதராக பணியாற்றவுள்ளார். Read more

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை என ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். Read more

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. பிரஜைகளுக்கு வாழ்வதற்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளமையை கருத்தில்கொண்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

நேற்றைய தினம் கழகத்தின் முன்னாள் மூத்த உறுப்பினரும் நெடுங்கேணி குளவிசுட்டான் அ.த,க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபருமாகிய திரு சி.ராஜரட்ணம் அவர்களின் மணிவிழா மற்றும் மணிவிழா மலர் வெளியீடும் பாடசாலை மண்டபத்தில் அதிபர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது . நிகழ்வில் கட்சியினுடைய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிமனையின் உயரதிகாரிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Read more

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. Read more