ஆழிப் பேரலையால் சொந்தங்கள் காவுகொள்ளப்பட்ட கருப்பு நாள். சுனாமி என்னும் பெயர் தாங்கிய கொடிய அலைகள் உறவுகளின் உயிர், உடைமைகளை எம் கண் முன்னே பலியெடுத்த கொடிய நாள். அந்த துன்பகரமான நிகழ்வு நடைபெற்று 18 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

அதனை நினைவுகூரும் முகமாக வவுனியா கோவில்குளம் கிராமசேவகர் பிரிவில் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று ஆழிப் பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் எமது கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.